இலங்கையர்களுக்கு கொரியாவில் தற்காலிக வேலைவாய்ப்பு!

317 0

கொரியாவில் ஒப்பந்தகாலம் நிறைவுற்றுள்ள இலங்கைப் பணியாளர்களுக்கு தற்காலிகமாக விவசாயத்துறையில் தொழில் வழங்க, கொரியா அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதி பொறுப்பதிகாரி மங்கள ரந்தெனிய இதனைத் தெரிவித்துள்ளார்.

மூன்று மாதத்திலிருந்து 6 மாதம் வரையான காலப்பகுதிக்கு, இந்த தற்காலிக தொழில்வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.