கிம்புலா ஹெலே குணாவின் சகோதரர் உட்பட 9 பேர் கைது

444 0

இந்தியாவில் தலைமறைவாகியிருப்பதாக சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் கடத்தல் காரரான “கிம்புலா ஹெலே குணா”விற்கு நெருக்கமானவர்கள் 8 பேர் மற்றும் அவரின் சகோதரரான சுரேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடம் இருந்து 70 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 18 ஆம் திகதி சபுகஸ்கந்த பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் வட மாகாணத்தில் இருந்து கண்டி ஊடாக கொழும்பிற்கு போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.