கிளிநொச்சி விபத்தில் விசேட அதிரடிப்படை வீரர் பலி

157 0

கிளிநொச்சி ஏ-9 வீதி பிரதான வீதியின் 155 கட்டைப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்து இன்று மாலை 4.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது

கிளிநொச்சி நகர் பகுதியில் இருந்து வந்த டிப்பருடன் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

32 வயதுடைய, தனபாலகே ரோஷன் பிரதீப் எனும் விசேட அதிரடிப்படை வீரரே இவ்வாறு பலியாகியுள்ளார்.

மற்றொருவர் படுகாயங்களுடன் கிளிநொச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

டிப்பர் வாகன சாரதிகள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.