மாகாணசபைகள் தேர்தல்கள் குறித்து அரசாங்கம் தனது நிலைப்பாட்டை அறிவிக்கவேண்டும்

469 0

மாகாணசபைகள் தேர்தல்கள் குறித்து அரசாங்கம் தனது நிலைப்பாட்டை அறிவிக்கவேண்டும் என தேர்தல் கண்காணிப்பு அமைப்பான கபே வேண்டுகோள் விடுத்துள்ளது.

சில மாகாணசபைகள் கலைக்கப்பட்டு மூன்று வருடங்களாகிவிட்டன என தெரிவித்துள்ள கபே ஜனநாயக கட்டமைப்பொன்றில் மாகாணசபை தேர்தல்கள் தாமதமாவதை ஏற்றுக்கொள்ள முடியாது என குறிப்பிட்டுள்ளது.

மத்திய அரசாங்கங்களுக்கு பொறுப்பான ஆளுநர்களே தற்போது மாகாணசபைகளை ஆட்சி செய்கின்றனர் என கபே தெரிவித்துள்ளது.

அதிகாரங்களை பகிர்வதற்காகவே மாகாண சபைமுறை உருவாக்கப்பட்டது என குறிப்பிட்டுள்ள கபே மிகநீண்ட காலத்துக்கு ஆளுநர்கள் மாகாணசபைகளை ஆட்சி செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ளது.

தீர்மானங்களை எடுக்கும் அனைத்து அதிகாரமும் ஆளுநர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன என குறிப்பிட்டுள்ள கபே இது மாகாணசபைகள் முறை மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கைகளுக்;கு பாதிப்பை ஏற்படுத்திவிடும் என தெரிவித்துள்ளது.