மாவீரர்கள் நினைவு விழாவில் பங்கேற்க மாவீரர்களின் பெற்றோர்களுக்கு அழைப்பு

286 0

leader-v-prabakaran-555f1தமிழினத்தின் விடிவுக்காக போராடி தமது உயிர்களை தியாகம் செய்த மாவீரர்களை நினைவு கூர்ந்து ஒவ்வொரு வருடமும் கார்த்திகை 27ஆம் திகதி தமிழ் மக்களினால் மாவீரர் நாள் அனுஸ்டிக்கப்படுகின்றது.

யுத்தம் முடிவடைந்து மக்கள் மீள்க் குடியமர்ந்த பின்னரும் கடந்த ஏழு வருடங்களாக தங்கள் பிள்ளைகளை நினைவு கூற முடியாதவர்களாக தமிழ் மக்கள் தவித்து வந்துள்ளனர்.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் வழிகாட்டலுக்கு அமைய நேற்று முன்தினமும் நேற்றும் கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம் மற்றும் முழங்காவில் மாவீரர் துயிலும் இல்லம் ஆகியவற்றில் மக்கள் உணர்வுடன் பங்குபற்றி துய்மையாக்கும் பணியில் ஈடுப்பட்டுவந்தனர்.

இதேவேளை இன்று திட்டமிட்டபடி கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம் மற்றும் முழங்காவில் மாவீரர் துயிலும் இல்லங்களில் மாலை வேளையில் மணி ஒலிக்கப்பட்டு 6.00 மணிக்கு பிரதான ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு பின் தனித்தனியாக அமைக்கப்பட்டிருக்கும் சுடர்கள் ஏற்றப்பட்ட மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்படவுள்ளது.

எனவே குறித்த கனகபுரம் மற்றும் முழங்காவில் மாவீரர் துயிலும் இல்லங்களுக்கு மாவீரர்களின் பெற்றோர்கள் உறவினர்கள் மாலை 4 மணியளவில் வருகைத் தந்து மாவீரர்களை அஞ்சலி செலுத்துமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி கிளையினர் அழைப்பு விடுக்கின்றனர்.