பிடல் காஸ்ட்ரோவின் உடல் இன்று தகனம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இறுதி கிரியைகள் டிசம்பர் மாதம் 4ஆம் திகதி தென்கிழக்கில் உள்ள சாண்டியாகோவில் நடைபெறும் என்றும் கியூப அரசாங்கம் அறிவித்துள்ளது.
கியூப அரசு தொலைக்காட்சியில் காஸ்ட்ரோவின் சகோதரரும், தற்போதைய ஜனாதிபதி ரவுல் காஸ்ட்ரோ இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
பிடல் காஸ்ட்ரோவின் மரணத்தை தொடர்ந்து கியூபாவில் ஒன்பது நாட்கள் துக்கம் அனுஷ்டிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பனிப்போரின் போது புரட்சி மற்றும் எதிர்ப்பின் சின்னமாகத் திகழ்ந்த, முன்னாள் கியூபா அதிபர் பிடல் காஸ்ட்ரோ, தனது 90வது வயதில் நேற்று காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

