அமைச்சுப் பதவியை நிராகரித்து தலதா மாளிகையில் இருந்து வெளியேறிய விஜயதாச ராஜபக்ஷ

295 0

அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கான பதவிப்பிரமாண நிகழ்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் கண்டி தலதா மாளிகையில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்றது.

இதன்போது, 28 அமைச்சர்கள் மற்றும் 40 இராஜாங்க அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்துகொள்வர் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இருப்பினும் இன்றைய பதவியேற்பு நிகழ்வில் 39 இராஜாங்க அமைச்சர்கள் மாத்திரமே பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். கல்வி இராஜாங்க அமைச்சுப் பதவி எவருக்கும் வழங்கப்படவில்லை.

இந்த நிலையில்,  கல்வி இராஜாங்க அமைச்சராகப் பதவியேற்பதற்குப் பெயர் குறிப்பிடப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தனக்கு ஒதுக்கப்பட்ட அமைச்சை நிராகரித்துள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

விஜயதாச ராஜபக்ஷவுக்கு கல்வி இராஜாங்க அமைச்சர் பதவி வழங்கப்படும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலை கண்டிக்குச் சென்ற விஜயதாச ராஜபக்ஷ, அதனைத் திட்டவட்டமாக நிராகரித்துவிட்டு தலதா மாளிகையிலிருந்து வெளியேறியுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.