சிங்கத்தின் குகைக்குள் ஓர் உறுமல்………!

698 0

சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணித் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வெற்றியீட்டிள்ளார்.

அகில இலங்கை தமிழ் காங்கிரசின் சைக்கிள் சின்னத்தில் கஜேந்திர குமார் பொன்னம்பலம் – 31 , 658 விரும்பு வாக்குகளை பெற்றார்.

“தமிழ் தேசியம் இன்னும் உயிர்ப்புடன்தான் உள்ளது” என்பதனை உலகிற்கு ஈழத் தமிழினம் உரக்க கூறியுள்ளது.

தேசியப் பட்டியல் மூலம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு இன்னுமொரு ஆசனம் கிடைத்திருப்பதாக சிறிலங்கா தேர்தல் ஆணையகம் அறிவித்துள்ளது. இதனால் தமிழ் தேசிய ஆர்வலர்கள் மேலும்  மகிழ்சியடைந்துள்ளனர்.

அதே வேளை தேசிய பட்டியல் ஆசனத்தை கிழக்கு மாகாணத்துக்கு வழங்க வேண்டும் தமிழ் தேசிய ஆர்வலர்கள் ஆக்கபூர்வமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இத் தேசியபட்டியலில் யாரை தெரிவு செய்யப் போகிறார்கள் என்பதிலேயே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் எதிர்காலம் உள்ளது என அரசியல் அவதானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மாமனிதர் இம் மண்ணுக்கு தந்த அறிவாளி சரியான முடிவை எடுப்பாரா?