நடைபெற்று முடிந்துள்ள நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்.மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியில் சி.ஸ்ரீதரன், எம்.ஏ.சுமந்திரன், சித்தார்த்தன் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியில் விருப்பு வாக்குகள் விடயத்தில் குழப்ப நிலை ஏற்பட்ட நிலையில், தற்போது தேர்தல் முடிவுகள் தொடர்பாக யாழ்ப்பாணம் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் க.மகேசன் தகவல் வெளியிட்டுள்ளார்.
இதன்படி, இலங்கை தமிழரசுக் கட்சியில், சிவஞானம் ஸ்ரீதரன் அதிகூடிய விருப்பு வாக்குகளாக 35,884 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
இதையடுத்து, எம்.ஏ.சுமந்திரனுக்கு 27,834 விருப்பு வாக்குகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சித்தார்த்தன் 23,840 விருப்பு வாக்குகளையும், சசிகலா 23,098 விருப்பு வாக்குகளையும் பெற்றுள்ளனர். அத்துடன், ஈ.சரவணபவன் 20,358 வாக்குகளையும், மாவை சேனாதிராஜா 20,292 வாக்குகளையும், பா.கஜதீபன் 19,058 வாக்குகளையும், ஆர்னோல்ட் 15,386 வாக்குளையும் கு.சுரேந்திரன் 10,917 வாக்குளையும், வே.தபேந்திரன் 5,952 வாக்குளையும் பெற்றுள்ளனர்.