சம்பூரில் மாற்று மின்திட்டம்

5021 0

sampoor-450x300சம்பூரில் அனல் மின் நிலையத்தை அமைப்பது தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்தினால் சுற்றுச்சூழல் கரிசனை எழுப்பப்பட்டுள்ள போதிலும், இதற்கு மாற்றாக, இயற்கை திரவ எரிவாயு மின் நிலையத்தை அமைப்பதா அல்லது அனல் மின் நிலையத்தை அமைப்பதா என்பது குறித்து சிறிலங்கா இன்னமும் இந்தியாவுக்கு அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. இந்தியாவின் மின்சக்தி அமைச்சின் செயலர் பி.கே.புஜாரி இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

அனல்மின் திட்டத்தினால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என்று உள்நாட்டில் எதிர்ப்புக் கிளம்பியுள்ளதால், சிறிலங்காவே முடிவெடுக்க வேண்டிய நிலையில் உள்ளது. அதற்குப் பின்னரே, இந்தியா இந்த திட்டத்துக்கான ஒத்துழைப்பை வழங்க முடியும்.” என்றும் அவர் தெரிவித்தார்.

அதேவேளை, இயற்கை திரவ எரிவாயு மின் திட்டம் சிறிலங்கா போன்ற நாடுகளுக்கு பயனளிக்காது என்று இந்தியாவின் தேசிய அனல்மின் நிறுவனத்தின் தலைவர், குர்தீப் சிங் தெரிவித்துள்ளார். உலக சந்தையில், எரிவாயு விலை தளம்பலாக உள்ளது என்றும், எரிவாயு மின் திட்டத்தை செயற்படுத்த 10 ஆண்டுகள் ஆகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Leave a comment