யாழில் பாராளுமன்ற தேர்தலுக்கான அனைத்துப் பணிகளும் நிறைவு

599 0

  பாராளுமன்ற தேர்தலுக்கான அனைத்துப் பணிகளும் நிறைவு பெற்றுள்ளதுடன் 8 235 உத்தியோகத்தர்கள் பணிக்கமர்த்தப் பட்டுள்ளனர். விசேடமாக இம்முறை சிரேஷ்ட தலைமை தாங்கும் அதிகாரிகளாக 22 பெண் உத்தியோகத்தர்கள் நியமிக்கப் பட்டுள்ளன என யாழ் மாவட்ட அரச அதிபர்.க.மகேசன் தெரிவித்துள்ளார்.

தேர்தல் தொடர்பிலான பூர்வாங்க திட்டங்கள் குறித்து யாழ் மத்திய கல்லூரியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் குறியதாவது:

சகல ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளன.30பேர் அளவில் சுய தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் அவர்களுக்கான ஒழுங்குகளும் மாற்றுத் திறனாளிகளுக்கான விசேட ஒழுங்குகளும் செய்யப்பட்டுள்ளன. வாக்காளர்கள் எந்த கால தாமதமுமின்றி சுகாதார நடைமுறையுடன் நேரத்துடன் சென்று வாக்களிக்க வேண்டும்.

எமது செயலகத்தில் 50%அதிகமாக பெண்கள் பணிபுரிகின்றனர். அடுத்து வரும் காலங்களில் இன்னும் அதிகமானவர்கள் உட்பட மாற்றுத்திறனாளிகளும் அதிகாரிகளாக இணைத்துக்கொள்ளப்படுவார்கள். நெடுந்தீவிலிருந்து வாணூர்தியூடாகவும் தீவகத்திலிருந்து கடற்படையுதவியுடனும் வாக்குப்பெட்டிகள் வாக்குஎண்ணும் நிலையம் வந்தடையும். 6ஆம் திகதி காலை 7மணிக்கு வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பமாகும் என்றார்.