காணி உரிமையைப் பெற்றுக்கொடுக்காது தேசிய ஒற்றுமையை ஏற்படுத்தமுடியாது

458 0

handunetti-720x480வடக்குக் கிழக்கு மக்களுக்கு காணி உரிமையைப் பெற்றுக்கொடுக்காது தேசிய ஒற்றுமையை ஏற்படுத்தமுடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அவர் உரையாற்றுகையில், வடக்குக் கிழக்கில் விடுவிக்கப்படவேண்டிய காணிகள் யுத்தம் நிறைவடைந்து ஏழு ஆண்டுகள் கழித்தும் இன்னும் மக்களிடம் கையளிக்கப்படவில்லை.

வடக்குக் கிழக்கு மக்கள் கோரும் அரசியலில், அவர்களின் காணி உரிமையும் உள்ளடங்கியுள்ளது. எனவே காணி உரிமைகளைப் பெற்றுக்கொடுக்காது தேசிய ஒற்றுமையை ஏற்படுத்தமுடியாது.

வவுனியாவில் 1993ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட சிதம்பரமுகாம் அகதி முகாமில் வசிக்கும் மக்கள் இன்றுவரை அகதிமுகாம் வாழ்க்கையே வாழ்கின்றனர்.

எதிர்காலத்தில் நலன்புரி நிலையம் என்ற பெயரை மாற்றி, அம்மக்களை சொந்த இடங்களில் குடியேற அனுமதிக்கவேண்டும். அதற்கான நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொள்ளவேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.