கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணியின் தந்தை காலமானார்!

49 0

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதற் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணியின் (துரைசிங்கம் புஸ்பகலா) தந்தையார் கணபதிப்பிள்ளை துரைசிங்கம் நேற்றுக் காலமானார்.

யாழ்ப்பாணம் வேலணை மண்கும்பானைப் பிறப்பிடமாகக்  கொண்ட அவர் தற்போதுகிளிநொச்சி பூநகரியிலுள்ள முட்கொம்பன் பகுதியில் வசித்து வந்திருந்தார். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அன்னாரின் இறுதிக் கிரியை நாளை முற்பகல் 11.00 மணிக்கு பூநகரி முட்கொம்பனில் இடம்பெறவுள்ளது.