தேசியக்கொடியை மதிப்போம், திராவிடக் கொடியும் பிடிப்போம் – கவிஞர் வைரமுத்து

36 0

தேசியக் கொடியை மதிப்போம்; திராவிடக் கொடியும் பிடிப்போம் என கவிஞர் வைரமுத்து டுவிட் செய்துள்ளார்.

மத்திய அரசு நடைமுறைக்கு கொண்டு வர உள்ள புதிய கல்வி கொள்கைக்கு ஆதரவாக பலர் பேசி வரும் நிலையில், இதனால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என சிலர் எதிர்ப்பு தெரிவித்தும் வருகின்றனர்.

இந்நிலையில்  கவிஞர் வைரமுத்து டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

அண்ணா – கலைஞர் இறுதி செய்ததும்,  எம்.ஜி.ஆர் – ஜெயலலிதா உறுதி செய்ததும் இருமொழிக் கொள்கை தான். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசும் அதைத் தாங்கிப் பிடிக்கத் தயங்கத் தேவையில்லை. தேசியக் கொடியை மதிப்போம்; திராவிடக் கொடியும் பிடிப்போம்.

என பதிவிட்டுள்ளார்.