சிறிலங்காவில் புலனாய்வுத் துறையின் தோல்விக்கு ஜனாதிபதி – பிரதமருக்கிடையிலான மோதல் காரணம் அல்ல-பீரிஸ்

246 0

சிறிலங்காவில் ஈஸ்டர் படுகொலை குறித்து தேசிய புலனாய்வுத் துறையின் முன்னாள் தலைவர், நிலந்த ஜெயவர்தன வழங்கிய சாட்சியங்கள் இரண்டு வெவ்வேறு கட்சிகளிலிருந்து ஜனாதிபதியையும் பிரதமரையும் ஏன் தேர்ந்தெடுக்கக்கூடாது என்பதைக் காட்டியதாக பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

2015 ஜனவரியில் நல்லாட்சி அரசாங்கத்தின் தொடக்கத்தில் மைத்திரிபால சிறிசேனவுக்கும் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையிலான முறுகல் நிலை தேசிய புலனாய்வுத் துறையினை மிகவும் கடினமான சூழ்நிலையில் வைத்தது என்பதை காட்டியுள்ளதாக கூறினார்.

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், நிலந்த ஜெயவர்தன வழங்கிய சாட்சியம் குறித்து கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு கூறியுள்ளார்.

இதில் அரசியல் தலைமை தோல்வியுற்றது என்பதில் சந்தேகம் இல்லை என தெரிவித்த அவர், அலட்சியம் மூலம் பயங்கரவாத திட்டத்தை முன்னோக்கி செல்ல அனுமதித்தவர்கள் தாக்குதலை தடுக்காதமையினை ஜனாதிபதி-பிரதமர் முரண்பாட்டில் குற்றம் சாட்ட முடியாது என குறிப்பிட்டார்.

மேலும் கோட்டாபய ராஜபக்ஷ 2019 ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றால் சர்வாதிகாரம் குறித்து பலமுறை எச்சரித்த ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச பல சந்தர்ப்பங்களில் ஜனாதிபதியின் கீழ் பிரதமராக பணியாற்றத் தயாராக இருப்பதாக அறிவித்தார்.

இருப்பினும் நிலந்த ஜெயவர்தனவின் கூற்றின் பின்னணியில் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து பிரிந்து சென்ற ஐக்கிய மக்கள் சக்தியின் தயார் நிலை குறித்து ஆராயப்பட வேண்டும் என்றும் ஜி.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.