சிறிலங்காவில் மக்கள் எவ்வித பயமோ, பீதியோ இன்றி அனைவரும் வாக்களிக்க வேண்டும் என கோரிக்கை!

248 0

சிறிலங்கா மக்கள் எவ்வித பயமோ, பீதியோ இன்றி அனைவரும் வாக்களிக்க வேண்டும் என மட்டக்களப்பு சிவில் சமுக குழுவின் தலைவர் எஸ். மாமாங்கராஜா தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் நேற்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “கடந்த காலங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வாக்களிப்பு வீதம் மிகவும் குறைவாகவே காணப்பட்டது.

கிராமப் புறங்களில் உள்ள மக்கள் வாக்களிப்பதில் காட்டும் ஆர்வத்தைப்போல் நகர் புறங்களில் வாழ்பவர்கள் வாக்களிப்பில் ஆர்வம் காட்டுவதில்லை. இதற்குக் காரணம் கடந்த யுத்தகாலம் வாக்களிப்பதில் விருப்பமின்மையை ஏற்படுத்தியிருக்கலாம்.

தற்பொழுது வாக்களிக்கச் சென்றால் கொரோனா தொற்று ஏற்படும் என பொய் வாந்தி பரப்பப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் எந்த ஒரு தனி நபரும் கோரோனா நோயினால் பாதிக்கப்படவில்லை.

மட்டக்களப்பில் கொரோனா கண்டறிபய்பட்ட ஒருவர் வெளிநாட்டில் இருந்து வந்தவர். அவரும் பூரண குணமடைந்து விட்டார். எனவே மக்கள் எவ்வித பயமோ, பீதியோ இன்றி அனைவரும் வாக்களிக்க வேண்டும். கடந்த காலத்தைவிட 80 தொடக்கம் 85 வீதம் வாக்களிக்க வேண்டும்.

மக்கள் ஜனநாயக உரிமையினைப் பயன்படுத்தி உங்களுக்கு விருப்பமான பொருத்தமான தகுதியான நல்லவரைத் தெரிவு செய்யுங்கள்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.