பொதுஜன பெரமுனவின் வேட்பாளருக்கு மரணதண்டனை

287 0

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் இரத்தினபுரி மாவட்ட வேட்பாளர் பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூவருக்கு இரத்தினபுரி  மாவட்ட நீதிமன்றம் மரணதண்டனை விதித்துள்ளது.

2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின்போது, காஹவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பிலேயே மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் சபரகமுவ மாகாண சபை உறுப்பினர் நிலந்த ஜெயகொடி, கஹவத்தை பிரதேச சபைத் தலைவர் வஜிர ஆகியோருக்கும் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2015ஆம் ஆண்டு ஜனவரி 4ஆம் திகதி அப்போதைய ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவாக, காஹவத்தையில் பிரசாரக் கூட்டங்களை ஏற்பாடு செய்தவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு ஒருவரை கொலை செய்தமை, மேலும் இருவருக்கு காயங்களை ஏற்படுத்திக் கொலை செய்ய முயற்சித்தமை உள்ளிட்டக் குற்றச்சாட்டுகள் மேற்குறித்த மூவருக்கு எதிராகவும் சட்டமா அதிபரால் முன்வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் கொலைக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த மூவருக்கும் மரணதண்டனை விதிக்கப்பட்டது. இத்தீர்ப்பு 5 மணித்தியாலங்கள் வாசிக்கும் அளவுக்கு நீண்டதாக இருந்தது.