மாவீரர் நாளைத் தடுத்து நிறுத்த சிறிலங்கா அரசாங்கம் முயற்சி -தமிழீழ விடுதலைப் புலிகள்.

368 0

logo-a-ulagamஇலட்சியத்தால் ஒன்றுபட்டு எழுச்சிகொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிடமுடியாது.

-தமிழீழத் தேசியத் தலைவர்-

ஒற்றுமையே எமது இனத்தின் பலம்.

தமிழினத்தின் ஒற்றுமையையும் கொள்கைப் பற்றையும் வெளியுலகிற்கு எடுத்துக்காட்டும் ஒரு நிகழ்வாகவே ஆண்டுதோறும் நாம் மாவீரர்நாளை நினைவுகூருகின்றோம். இப்புனித நாளில் தமிழ் மக்கள் உணர்வு பூர்வமாக கலந்துகொள்வதையும், மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்துவதையும் தடுத்துநிறுத்தவே, எமது எதிரயான ஸ்ரீலங்கா அரசு தாயகத்தில் மாவீரர் துயிலும் இல்லங்களை அழித்தது. அத்தோடு நின்றுவிடாமல், புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழ் உணர்வாளர்களிடையே குழப்பங்களை ஏற்படுத்துவதுடன், தமிழ்மக்கள் இந்நிகழ்வுகளில் கலந்துகொள்வதை தடுப்பதற்கான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளது.

இதன்விளைவாகவே கடந்தசில ஆண்டுகளாக, ஒரேநாட்டில் இரண்டு மாவீரர்நிகழ்வுகளை நடாத்துவதற்கான ஏற்பாடுகள் ஒருசிலரூடாக நடந்தவண்ணம் உள்ளதை காணக்கூடியதாக உள்ளது.
ஸ்ரீலங்கா அரசு தனது இந்தச் சதிவலையில் சிலரை சிக்கவைத்துள்ளதுடன், அவர்களின் உதவியுடன் வன்முறைகளையும் தூண்டிவிட்டுள்ளது. இதன்மூலம் மாவீரர்நாளின் புனிதத்தன்மையை மாசுபடுத்த நினைக்கிறது. மேலும், புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழீழ மக்களின் நன்மதிப்பையும், ஒழுக்கத்தையும் சீர்குலைத்து வெளிநாட்டுமக்களிடையே தமிழர்களைப்பற்றிய எண்ணகருவில் மாற்றத்தை ஏற்படுத்தவும், தொடரும் எமது விடுதலைப் பயணத்திற்கு தடைபோடவும் எண்ணுகின்றது.

ஸ்ரீலங்காஅரசின் இத்தகைய திட்டமிடலின் ஓர் அங்கமாகவே பிரான்ஸ் நாட்டில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர் மீதான வாள்வெட்டுச் சம்பவத்தை நாம் நோக்குகின்றோம். அத்துடன் இச்சம்பவத்தை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

எதிர்வரும் 27ம் நாள் ளுயசஉநடள நகர மண்டபத்தில் நடைபெறவுள்ள மாவீரர் நாளை குழப்புவதற்காக ஸ்ரீலங்காஅரசு முன்னெடுக்கும் இந்த சூழ்ச்சித்திட்டத்தை தமிழ்மக்களாகிய நாம் முறியடிப்போம். எல்லோரும் ஓரிடத்தில் அணிதிரண்டு எமது தேசப்புதல்வர்களை நினைவுகூர்வோம். இதன்மூலம் எமது இனத்தின் ஒற்றுமையையும் பலத்தையும் எமது விடுதலையை நசுக்கநினைக்கும் ஸ்ரீலங்கா அரசுக்கு வெளிப்படுத்துவோம்.

”புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

prans