சுகாதார பரிசோதகர்களின் கோரிக்கைகளையும் அரசாங்கம் மறு பரிசீலனை செய்ய வேண்டும் – இராதாகிருஷ்ணன்

239 0

பொது சுகாதார பரிசோதகர்களின் கோரிக்கைகளையும் அரசாங்கம் மறு பரிசீலனை செய்ய வேண்டும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

பொது சுகாதார பரிசோதகர்கள் கொரோனா தோற்று கடமையிலிருந்து விலகி இருக்க தீர்மானித்திருப்பதாக தெரிவித்திருக்கும் கருத்து தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தலவாக்கலையில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு  கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், “இன்று உலகம் பூராவும் கொரோனா தொற்று பெரும் அளவில் பரவி வருகின்றது. இலங்கையிலும் கடந்த சில வாரங்களாக ஒவ்வொருநாளும்கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் கண்டுபிடிக்கப் படுகிறார்கள்.

இவ்வாறான ஒரு சூழ்நிலையில் பொது சுகாதார பரிசோதகர்கள் தங்களுடைய கடமையில் இருந்து விலகி இருப்பது இந்த தொற்று பரவாமல் இருப்பதை தடுப்பதற்கு உகந்த ஒரு விடயமாக நான் கருதவில்லை.

எனவே அரசாங்கம் இவர்களை அழைத்து கலந்துரையாடி இவர்கள் கேட்கும் அந்த அதிகாரங்களை இவர்களுக்கு வழங்கி அவர்களையும் இணைத்துக் கொண்டு இந்த கொரோனா தொடர்பான நடவடிக்கையில் ஈடுபட முடியுமாக இருந்தால் அதுவே வெற்றியான செயல்பாடாக இருக்கும் என நான் கருதுகின்றேன்.

கடந்த காலங்களில் பொது சுகாதார பரிசோதகர்கள் தங்களை அர்ப்பணித்து இந்த கடமையில் ஈடுபட்டதை நாங்கள் காண முடியும் எனவே அனைவரையும் இணைத்துக் கொண்டு இந்த பயணத்தை செல்வோமாக இருந்தால் மாத்திரமே கொரோனா தொற்று  பரவுவதை தடுக்க முடியும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்