வடக்கு- கிழக்கு மக்களின் பிரச்சினை ஐ.தே.க.வுக்கு வெறும் தேர்தல் பிரசாரம் மாத்திரமே- சந்திரசேன

234 0

வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் அடிப்படை பிரச்சினை, ஐக்கிய தேசிய கட்சிக்கு வெறும் தேர்தல் பிரசாரம் மாத்திரமே என சிறிலங்காவின் வனஜீவராசிகள் பாதுகாப்பு மற்றும் சுற்றாடல் துறை அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார்.

அநுராதபுரத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடக சந்திப்பில் எஸ்.எம்.சந்திரசேன மேலும் தெரிவித்துள்ளதாவது, “நாட்டிலுள்ள அனைத்து இன மக்களுக்கும் எந்ததொரு வெறுபாடுமின்றி அபிவிருத்தி செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும்.

மேலும் சிறந்த அரசாங்கமொன்றினை அமைப்பதற்காக சிறுப்பான்மையின மக்களுக்கு போலியான வாக்குறுதிகளை ஒருபோதும் வழங்கமாட்டோம்.

ஐக்கிய தேசிய கட்சி, வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் அடிப்படை பிரச்சினைகளை தேர்தல் பிரசாரங்களுக்காக பயன்படுத்துகின்றது. இவ்வாறான செயற்பாடுகளை நாம் ஒருபோதும் செய்யமாட்டோம்.

இதேவேளை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் மகக்ளின் அடிப்படை பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதி விசேட கவனம் செலுத்தியுள்ளார்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.