இரணைமடுக்குள கமக்கார அமைப்புக்களின் கணக்குகள் மீளாய்வுசெய்யப்பட வேண்டும்-விவசாயிகள் கோரிக்கை

372 0

iranaimaduகிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் கீழ் உள்ள கமக்கார அமைப்புக்களின் கணக்குகள் உரிய முறையில் மீளாய்வு செய்யப்படவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் கீழ் உள்ள 21 கமக்கார அமைப்புக்களில் குறிப்பிட்ட சில கமக்கார அமைப்புக்களின் நிதிகள் உரிய முறையில் கையாளப்படாமல் முறையற்ற விதத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அமைப்புக்கள் தொடர்பாக விவசாயிகளால் உரிய அதிகாரிகளின் கவனத்திற்குக்கொண்டு செல்லப்பட்ட போதும் இதுவரை எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்றும் விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

குறிப்பாக மேற்படி 21 அமைப்புக்களில் குறிப்பிட்ட சில விவசாய அமைப்புக்கள் விவசாயிகளின் பயன்பாட்டுக்கென வழங்கப்பட்ட தெளிகருவிகள், இரு சக்கர உழவு இயந்திரங்கள் உள்ளிட்ட விவசாய உபகரணங்கள் உரிய முறையில் விவசாயிகள் பயன்படுத்துவதற்கு வழங்காது அமைப்புக்களில் உள்ளவர்கள் தமது சொந்தப்பயன்பாடுகளில் வைத்துள்ளனர்.

அத்துடன் குறித்த அமைப்புக்களின் நிதி நடவடிக்கைகள் உரிய முறையில் பயன்படுத்தப்படாது முறையற்ற விதத்தில் நிதி செலவிடப்படுகின்றது என்றும், இது தொடர்பாக உரிய ஆதாரங்களுடன் கமநல அபிவிருத்தி மாவட்ட திணைக்களம் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியபோதும் இதுவரை எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்றும், எதிர்வரும் ஆண்டில் குறித்த அமைப்புக்களின் புதிய நிர்வாகங்களை தெரிவு செய்வதற்கும், முன்னைய அமைப்;புக்களின் நிதி முறைகேடுகள் தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.