கொழும்பு மற்றும் காலி துறைமுகங்களில் நங்கூரம் இடப்பட்டுள்ள கப்பல்களில் பணியாற்றுவதற்காக வௌிநாட்டு மாலுமிகள் 47 பேர் கட்டுநாயக்க மற்றும் மத்தல விமான நிலையங்கள் ஊடாக இலங்கை வந்துள்ளனர்.
இன்று (15) அதிகாலை கட்டாரின் தோஹாவில் இருந்து குறித்த தரப்பினர் கட்டுநாயக்க விமான நிலையம் வந்தடைந்ததாக அததெரண செய்தியாளர் தெரிவித்தார்.
இதேவேளை, இந்தியாவின் பெங்களூரில் இருந்து மேலும் 5 மாலுமிகள் மத்தல விமான நிலையம் வந்தடைந்துள்ளனர்.
மேலும் இலங்கையில் தங்கியிருந்த 17 மாலுமிகள் இந்தியாவின் பெங்களூர் நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

