இலங்கையில் விசேடமாக எந்தகுழுவை சேர்ந்த மக்களையும் கண்காணிக்கும் நடவடிக்கையில் பாதுகாப்பு தரப்பினர் ஈடுபடவில்லையாம்

252 0

அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான உரிமைகளுக்கான சுதந்;திரம் குறித்த ஐநாவின் விசேட அறிக்கையாளர் வெளியிட்டுள்ள கரிசனைகளை இலங்கை நிராகரித்துள்ளது.

இலங்கையி;ல் விசேடமாக எந்தகுழுவை சேர்ந்த மக்களையும் கண்காணிக்கும் நடவடிக்கையில் பாதுகாப்பு தரப்பினர் ஈடுபடவில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

தேசிய பாதுகாப்பு நலன்களை அடிப்படையாக கொண்டுவழமையான சோதனை நடவடிக்கைகள் மாத்திரம் இடம்பெறுகின்றன, குறிப்பாக உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் இவை இடம்பெறுகின்றன என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஜெனீவாவிற்கான இலங்கையில் பதில் நிரந்ரவதிவிடப்பிரதிநிதி தயானி மென்டிஸ் இதனை தெரிவித்துள்ளார்.
உலகெங்கும் அதிகரித்துவரும் தீவிரவாத சக்திகளின் நுட்பமான நடவடிக்கைகளின் மத்தியில் எந்த நாடும் அதன் தேசிய நலன்களை சமரசம் செய்வதால் மோசமான விளைவுகள் ஏற்படலாம் என இலங்கை கருதுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

கண்காணிப்புகள் மற்றும் அச்சுறுத்தல்கள் குறிதத குற்றச்சாட்டுகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர் இந்த விடயத்தில் சம்பந்தப்பட்ட தரப்பினரை சட்டஅமுலாக்கல் தரப்பினரிடமோ அல்லது மனித உரிமைகள் அல்லது பொலிஸ் ஆணைக்குழுவிடமோ முறைப்பாடுகளை மேற்கொள்ளுமாறு அழைக்கின்றோம் அதன் மூலம் இந்த சம்பவங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

இனசிறுபான்மையினர் துன்புறுத்தப்படுவது குறித்த குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்கும் அனைத்து நம்பிக்கைகளையும் பின்பற்றுபவர்களையும் பாதுகாப்பதற்குமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தயானி மென்டிஸ் தெரிவித்துள்ளார்.