தமிழ் இளையோர் மக்கள் இயக்கம் அமைப்பினால் அம்பாறை மாவட்டத்தில் தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்காக 100 இலவச கையேடுகள் அண்மையில் வழங்கி வைக்கப்பட்டன.
கல்முனை கண்ணகி வித்தியாலயம், திருக்கோவில் புனித சவேரியார் வித்தியாலயம் மற்றும் கல்முனை பாசுபதேஸ்வரர் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் கல்வி பயில்கின்ற 100 மாணவர்களுக்கே இவ்விலவச கையேடுகள் வழங்கப்பட்டன.


