தாயகம் திரும்பிய மக்களின் குறைகள் தொடர்பான கலந்துரையாடல்(காணொளி)

350 0

jaffna-kachchery-meetting-with-refugeesஇந்தியாவிலிருந்து தாயகம் திரும்பிய மக்களின் குறைகள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இன்று யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்றது.

இந்தியாவிலிருந்து தாயகம் திரும்பிய மக்கள் இருப்பிடம், வாழ்வாதார உதவிகள், திருமண, பிறப்பு மற்றும் இறப்பு ஆவணங்களை பதிவுசெய்ய முடியாத நிலமை போன்ற குறைபாடுகள்காணப்படுவதாகவும்பிறப்புச்சான்றிதழ்கள்பெற்றுக்கொள்வதற்குகொழும்புசெல்லவேண்டியிருப்பதாகவும் இக்கலந்துரையாடலில் தெரிவித்தனர்.

அத்துடன் இந்தியாவிலிருந்து வந்த பின்பு வீடு மற்றும் மலசலகூடம் இல்லை, எதுவிதஉதவிகளும்செய்யப்படவில்லைஎன்றும்அவர்கள்குற்றம்சுமத்தினர். இந்நிலையில்,பிரதேசசெயலரிடம்தொடர்புகொண்டுஉதவிகளைப்பெற்றுக்கொள்ளுமாறும், அவ்வாறு உதவிகள் கிடைக்காவிடின் அரசாங்க அதிபர் தன்னுடன் தொடர்பு கொள்ளுமாறு இதன்போது தெரிவித்தார்.

இந்தியாவிலிருந்து தாயகம் திரும்பிய மக்களின் குறைகள் தொடர்பான கலந்துரையாடலில் யாழ்;ப்பாணத்திற்கான இந்தியத் துணைத்தூதுவர் ஆ.நடராஜன், காணிகளுக்கு பொறுப்பான யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் முரளி, ஒப்பெர் சிலோன் நிறுவன ஆலோசகர் ஆர்.பேரின்பநாயகம் மற்றும் அகதிகள் மறுவாழ்வு சங்கத்தின் தலைவி எஸ்.சூரியகுமாரி உட்பட பலர் கலந்துகொண்டனர்.