இம்முறை பாராளுமன்ற தேர்தலில் தனது கட்சி வெற்றி பெறாது என்பது தனக்குத் தெரியும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் தெரிவித்தார்.
ஆனால், தனது கட்சிக்குப் பல பக்க வெற்றிகள் கிடைக்கும் என அவர் தெரிவித்தார்.
மஹரகமவில் இடம்பெற்ற பொது பேரணியில் மேலும் தெரிவித்ததாவது,
பாராளுமன்றத்தில் மக்களின் குரல் பாதுகாக்கப்பட வேண்டுமென்றால் ஒரு குழுவைப் பாராளுமன்றத்திற்கு அனுப்பப்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.
அத்தோடு, இம்முறை பொதுத் தேர்தலில் தனது கட்சியால் வெற்றிபெற முடியாது என்பதைத் தான் அறிந்திருந்தாலும், தேர்தலில் பல பக்க வெற்றிகளைப் பெற ஒன்றிணையுமாறு தனது கட்சிக்கு அழைப்பு விடுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

