சிறிலங்காவில் இன்று மாலத்தீவில் இருந்து வந்த மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
அதன்படி தற்போது நாட்டில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2077 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை இன்றுமட்டும் மேலும் 14 பேர் குணமடைந்த நிலையில் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கையும் 1917 ஆக அதிகரித்துள்ளது.
அந்தவகையில் தற்போது 149 பேர் தொடர்ந்தும் வைத்திய கண்காணிப்பில் உள்ளதோடு 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

