ஒலிம்பிக்கில் ஹூசைன் போல்ட் பங்கேற்பதில் சந்தேகம்

439 0

Usain-Boltஇந்த ஆண்டு இடம்பெற உள்ள ரியோ ஒலிம்பிக் போட்டியில் தம்மால் பங்குப்பற்ற முடியுமா? என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக, உலகின் மின்னல் வீரர் என்று அழைக்கப்படும் குறுந்தூர ஓட்டவீரர் ஹூசைன் போல்ட் தெரிவித்துள்ளார்.
தனது டுவிட்டர் வலைத்தளத்தில் இந்த தகவலை அவர் பதிவிட்டுள்ளார்.
தமது இடது காலில் ஏற்பட்டுள்ள உபாதை காரணமாகவே இந்த சந்தேகம் ஏற்பட்டிருப்பதாக அவர் கூறியுள்ளார்.
மருத்துவர் ஓய்வில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கியுள்ளப் போதிலும் இயன்றளவு தான் ஒலிம்பிக் போட்டியில் பங்குப்பற்றவே எதிர்ப்பார்த்திருப்பதாகவும் ஹூசைன் போல்ட் தெரிவித்துள்ளார்.
ஜமைக்காவின் ஓட்டவீரரான ஹூசைன் போல்ட், ஒலிம்பிக் போட்டிகளில் 6 முறை தங்கப் பதக்கங்களை பெற்றுள்ளார்.
இந்த நிலையில், இந்த வருட கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகள் ரியோ டி ஜெனிரோவில் எதிர்வரும் ஆகஸ்ட் 5ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment