யான்ஓயாவில் கால் வழுக்கி விழுந்து விபரீதம்..!

21 0

புல்மோட்டை பொலிஸ் பிரிவிட்குட்ட பாலன்குளம் பிரதேசத்தில் யான்ஓயாவினை பார்வையிட வந்த நபரொருவர் கால் வழுக்கி ஓயாவில் விழுந்து உயிரிழந்துள்ளார்.

நேற்று (20) மாலை 4 மணிக்கு ஓயாவில் விழுந்த நபரை மீட்டு புல்மோட்டை வைத்தியசாலையில் அனுமதித்துள்ள நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

25 வயதுடைய உயிரிழந்த நபர் நிந்தவூர் பிரதேசத்தை சேர்ந்தவராவார்.

சடலம் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் புல்மோட்டை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.