32 வருடங்களுக்குப் பின் சொந்த இடத்தில் வாக்களிக்கவுள்ள மக்கள்

408 0

32 வருடகளுக்குப் பிறகு சொந்த இடத்தல் சொந்த மக்கள் வாக்களிப்பதற்கான நிலை இந்தப் பாராளுமன்றத் தேர்தலில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில் மக்கள் நேரகாலத்துடன் சென்று வாக்களிக்கவேண்டும் என வலிகாமம் வடக்கின் பிரதேச சபை தவிசாளர் சுகிர்தன் தெரிவித்தார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் காங்கேசன்துறை தொகுதி உறுப்பினர்களுடனான சந்திப்பிப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

வலிகாமம் வடக்குப் பகுதி நீண்டகாலமாகாக உயர் பாதுகாப்பு வலையமாக இருந்து பல்வேறு போராட்டங்கள் பேச்சுவார்த்தைகள் நல்லிணக்கங்கள் என பலவற்றை மேற்கொண்டு பல காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளது. இன்னும் காணிகள் விடுவிக்கப்படவுள்ளன

அரசியலுக்காக பலர் பல விடையங்களை எடுத்துக்கூறிவருகின்றார்கள் அதில் ஒன்று காணி விடுவிப்புக்களை கூட்டமைப்பு செய்ததா? கூட்டமைப்பின் முயற்சியால் தான் இவை இடம் பெற்றுள்ளது என்பது இப்பகுதி மக்களுக்குத் தெரியும். எனவே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முயற்சிகள் பல இடம் பெற்று வருகின்றன இனியும் இடம்பெறத்தான் உள்ளது.

இந்தத் தேர்தலில் மக்கள் அனைவரும் வாக்களிக்கவேண்டும் வாக்களிப்பதன்மூலம் தான் எங்களுக்குரிய ஜனநாயக உரிமையை பயன்படுத்த முடியும். இந்தத் தேர்தலில் பல கட்சிகளும் சுயோட்சைக்குழுக்களும் போட்டியிடுகின்றார்கள் இவர்கள் மக்களின் பலத்தை உடைப்பதற்காக ஒரு சிலரின் நிகழ்ச்சி நிரலில் இதனை செய்கின்றார்கள். மக்கள் அனைவரும் வாக்களிக்கவேண்டும் வாக்களிப்பதன் மூலம்தான் எமக்கான பலத்தை நிரூபிக்கமுடியும்.

இந்தமுறை பாராளுமன்றத் தேர்தலில் 1988 ஆம் ஆண்டு இறுதியாக இடம்பெற்ற வாக்களிப்பு நிலையமாக மயிலிட்டி கலைமகள் வித்தியாலயம் இருந்தது அதன் பின்னர் 2020 ஆம் ஆண்டு குறிப்பாக 32 வருடகளுக்குப் பின்னர் வாக்களிப்பு நிலையமாக மயிலிட்டி கலைமகள் வித்தியாலயம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இது எமக்குக் கிடைத்த சந்தர்ப்பமாகும் இதனை அனைவரும் பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்றார்.