இலங்கையில் சீனாவின் யுத்தக்கலை

455 0

ஜூன் மாத நடுப்பகுதியில் இலங்கை சீனாவிடமிருந்து மற்றுமொரு தொகுதி முகக்கவசங்களையும் மருத்துவ உபகரணங்களையும் பெற்றுக்கொண்டது-இது சீனாவின் வெளிவிவகார கொள்கையின் முக்கிய இலக்காக இலங்கை காணப்படுவதையும்,நன்கொடை இராஜதந்திரத்தையும் வெளிப்படுத்தியுள்ளது.

சீனா தொடர்ந்தும், இந்தோ பசுவிக்கில் தன்னை விஸ்தரிப்பதும்,அதன் புதிய பட்டுப்பாதை திட்டம் ஆரோக்கியமான பட்டுப்பாதைதிட்டமாக முடிவடைந்திருப்பதும்,அமெரிக்க-சீன பதட்டத்தினை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

இந்து சமுத்திரத்தில் முக்கிய கப்பல் பாதைகளின் அருகில் இலங்கையின் அமைவிடம் காரணமாக அமெரிக்க இராஜதந்திரி அலைஸ்வெல்ஸ் இலங்கையை முக்கியமான ரியல்எஸ்டேட் என குறிப்பிட்டார்.

இலங்கையுடனான உறவுகளை வலுப்படுத்துவதற்கான சீனாவின் தீவிர நடவடிக்கைகள் உலக ஒழுங்கினை மாற்றியமைத்துள்ளதுடன் அமெரிக்கா இலங்கையுடன் உறவுகளை பேணுவதற்கும் சர்வதேச கௌரவத்தை பேணுவதற்கும் எதனையாவது செய்யவேண்டிய நிலையை உருவாக்கியுள்ளது.

அதிகரிக்கும் பதட்டங்கள்

2019ற்கு முன்னர் இலங்கையின் நிர்வாகம் அமெரிக்கா சார்பானதாக காணப்பட்டது, அமெரிக்காவுடன் அரசியல் உடன்படிக்கைகளை ஏற்படுத்துவதில் விருப்பத்தை கொண்டிருந்தது.உதாரணத்திற்கு 2017 இல் அமெரிக்க சார்பு சிறிசேன- விக்கிரமசிங்க அரசாங்கம் அமெரிக்காவுடனான ஏசிஎஸ்ஏ உடன்படிக்கையை மேலும் பத்து வருடத்திற்கு மகிழ்ச்சியுடன் நீடித்தது.

ஏசிஎஸ்ஏ உடன்படிக்கை விநியோகங்களை பரிமாறிக்கொள்வது,ஆதரவளிப்பது, எரிபொருள் மீள்விநியோகம் போன்றவற்றிற்கு ஆதரவளித்தது,இது இந்தோ- பசுபிக்கில் அமெரிக்க இராணுவத்தின் நடவடிக்கைகளிற்கு உதவியாக காணப்பட்டது.

எனினும் இரண்டு வருடங்களின் பின்னர் சீன சார்பு கோத்தபாய ராஜபக்ச அரசாங்கம் அமெரிக்காவின் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க மறுத்துள்ளது,இதன் மூலம் இலங்கை அமெரிக்காவை விட சீனாவுடன் உறவுகளை பலப்படுத்துகின்றது என்பதை புலப்படுத்தியுள்ளது.

சமீபத்தில் அமெரிக்கா இலங்கையுடனான சோபா உடன்படிக்கையை புதுப்பிக்க தவறியது.

எம்சிசி உடன்படிக்கை மூலம் 480 மில்லியன் டொலர் அபிவிருத்தி நிதியை வழங்குவது என தெரிவித்த பின்னரும் அமெரிக்கா இந்த உடன்படிக்கையை புதுப்பிக்க தவறியது.

இலங்கையில் சீனாவின் புதிய பட்டுப்பாதை திட்டம் போல, அமெரிக்கா உட்கட்டமைப்பு திட்டங்களிற்கு உறுதியளித்த போதிலும் எம்சிசி உடன்படிக்கை குறித்து இலங்கையும் அமெரிக்காவும் பலமாதங்களாக ஆராய்ந்து வந்தன.

எனினும் இறுதியில் கொழும்பு நிர்வாகம் எம்சிசி உடன்படிக்கையில் காணப்படும் நிபந்தனைகளை ஏற்க மறுத்து அதில் கைச்சாத்திட மறுத்ததுடன் சோபா உடன்படிக்கையை புதுப்பிக்க மறுத்தது.

சோபா குறித்த உடன்படிக்கைகள் இலங்கையின் அரசியல் வர்க்கத்தின் மத்தியி;ல் விவாதங்களை உருவாக்கியிருந்தன, அவை அந்த உடன்படிக்கை இலங்கையின் இறைமைக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது என தெரிவித்தன.

ஜூன் 2019 பதட்டத்தின் போது அமெரிக்கா இராஜாங்க செயலாளர் மைக்பொம்பியோ – இந்துசமுத்திர பிராந்தியத்திற்கான தனது விஜயத்தின் போது இலங்கை;கான தனது விஜயத்தினை இரத்துச்செய்தார்.

விஜயத்தினை ஏற்பாடு செய்வதில் ஏற்பட்ட குழப்பம் காரணமாகவே தனது விஜயம் இரத்துச்செய்யப்பட்டது என அவர் தெரிவித்திருந்தார்.

சோபா உடன்படிக்கையின் ( தற்போது தோல்வியில் முடிவடைந்துள்ளது) அடிப்படையில் இலங்கையில் இராணுவமுகாமினை ஏற்படுத்துவதற்கான அமெரிக்காவின் முயற்சிகள் காரணமாக, உள்ளுர் மக்களின் உணர்வுகள் அமெரிக்காவிற்கு எதிராக உள்ளதன் காரணமாகவே இராஜாங்க செயலாளர் தனது விஜயத்தினை இரத்துச்செய்தார் என பல இலங்கையர்கள் ஊகம் வெளியிட்டனர்.

பின்னோக்கி பார்த்தால் – அந்த விஜயம் இரத்துச்செய்யப்பட்டமையும்,இலங்கையில்அமெரிக்காவின் செல்வாக்கு அதிகரிப்பதற்கு எதிரான உணர்வுகள்; அதிகரிப்பதும், இலங்கை – அமெரிக்க ஒத்துழைப்பு சீனாவிற்காக குறைவடைவதை கட்டியம் கூறும்வகையில் அமைந்திருந்தன

கொரோனா வைரஸ் சீனாவிடம் உள்ள பணப்பையின் சக்தியை வெளிப்படுத்தியுள்ள நிலையில், இலங்கை தனது கூட்டணியை மாற்றிக்கொண்டது ஆச்சரியமளிக்கும் விடயமல்ல,

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவத்தொடங்கிய பின்னர் இலங்கை அரசாங்கம் தனது கடன் நெருக்கடியையும், கொரோனா வைரசினையும் சமாளிப்பதற்காக சீன அரசாங்கத்தை அவசரமாக வெளிநாட்டு உதவியை வழங்குமாறு கேட்டிருந்தது.

அதற்கு சில நாட்களின் பின்னர் சீனா இலங்கைக்கு 500மில்லியன் அமெரிக்க டொலர்களை சலுகைகடனாக வழஙகுவதாக அறிவித்தது.இரண்டு நாடுகளும் நீண்ட நட்புறவு வரலாற்றை கொண்டுள்ளன என தெரிவித்த சீனா இலங்கை மக்களிற்கும் அரசாங்கத்திற்கும் சமுக மற்றும் பொருளாதார அபிவிருத்திக்கா தனது திறனிற்கு உட்பட்ட வகையில் தொடர்நதும் அவசியமான உதவிகளை வழங்க தயாராகவுள்ளதாக தெரிவித்திருந்தது.

சலுகை கடன்களிற்கு அப்பால் இலங்கைக்கு சீனா பல தடவைகள் மருந்துப்பொருட்களை வழங்கியுள்ளது.இறுதியாக ஜூன் மாதம் மருந்துபொருட்களை வழங்கியிருந்தது.மேலும் கொரோனா வைரசினை கட்டுப்படுத்தவதற்காக சீனா முன்னெடுத்த நடவடிக்கைகள் குறித்த பரந்துபட்ட அறிக்கையையும் அந்த நாடு வழங்கியிருந்தது.

சீனாவுடன் ஒப்பிடும்போது,இலங்கை கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்கு அமெரிக்கா 5.8 மில்லியன் நன்கொடையை மாத்திரம் வழங்கியுள்ளது.சீனாவின் 500 மில்லியன் டொலர் வாக்குறுதியுடன் ஒப்பிடும்போது இது மிகச்சிறிய தொகையாகும்.

சீனாவின் அதிகளவான நன்கொடை இராஜதந்திரத்துடன் ஒப்பிடும்போது, இலங்கை அமெரிக்காவுடன் நெருங்கிய ஒத்துழைப்பை தெரிவு செய்வதால் எந்த பிரயோசனமும் அந்த நாட்டிற்கு இல்லை போல தோன்றுகின்றது.

இது சீனா உலக ஒழுங்கை வெற்றிகரமாக மாற்றிவருகின்றது என்பதை புலப்படுத்துகின்றது.

அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவிற்கு 99 வருடத்திற்கு2017 இல் இழந்தவேளை புதிய பட்டுப்பாதை திட்டம், மற்றும் அதன் கடன்பொறி போக்குகளால் ஏற்படக்கூடிய ஆபத்திற்கான பிரபலமான முன்னுதாரணமாக இலங்கை மாறியது.

இதன் மூலம் உலகின் முக்கிய கடல்வழிப்பாதையில் சீனா மூலோபாய ரீதியில் முக்கியமான காலை வைப்பதற்கு அது உதவியது.

இந்த கடன்பொறிக்கு மத்தியிலும் இலங்கையின் சீனாவுடனான புதிய பட்டுப்பாதை உறவுகள் தொடர்ந்தும் வளர்ச்சியடைந்து வந்துள்ளன.

சில நாட்களிற்கு முன்னர் சீனா இலங்கையும் புதிய பட்டுப்பாதை அரசியல் கட்சிகள் கூட்டு கலந்தாய்வு பொறிமுறையொன்றை உருவாக்கியுள்ளன.

இந்த பொறிமுறை 2020 முதல் தடவையாக 11 ம் திகதி சந்தித்துள்ளது.

இந்த சந்திப்பு சீனாவின் கம்யுனிஸ்ட் கட்சி இரு தரப்பு உறவுகளை முன்னேற்றுவதற்கு இலங்கையின் அரசியல் கட்சிகளுடன் ஒத்துழைப்பதற்கு தயாராகவுள்ளது என்பதை உறுதி செய்தது.

மேலும் பிஆர்ஐ ஒத்துழைப்பையும் பொருளாதார ஒத்துழைப்பையும் விரிவாக்குவதற்கு குறித்தும் உறுதிமொழி வழங்கியது.

கொரோனா வைரஸ் தடுப்பிற்காகவும்,பொருளாதார அபிவிருத்திக்காவும் சீனா வழங்கிய மிகவும் பெறுமதியான ஒத்துழைப்பிற்கு இலங்கiயின் அரசியல் தலைவர்கள் தங்கள் ஆழமான நன்றிகளை வெளியிட்டனர்.

கொரோனா வைரசின் பின்னணியில், சீனா, அமெரிக்காவின் கௌரவத்திற்கும்- அமெரிக்க சீன உறவுகளிற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில்,சர்வதேசதலைமைக்கு கைப்பற்ற முயலும் நிகழ்ச்சிநிரலை முன்னெடுத்துள்ளது.
எதிரிக்கு கூட்டணிகள் இருந்தால் ,பிரச்சினை பாரதூரமானது- எதிரியின் நிலைமை பலமானது,அவனிடம் கூட்டணிகள் இல்லையென்றால் பிரச்சினை சிறியது,அவனது நிலைமை பலவீனமானது என சன் சூ தெரிவித்திருந்தார்.

சீனா, இந்தோ பசுவிக்கில்; உள்ள, மூலோபாய ரீதியில் முக்கியத்தும் வாய்ந்த அமெரிக்க கூட்டணியை பலவீனப்படுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.

குறிப்பாக இலங்கையில்.

பட்ரிக் மென்டிஸ்- முன்னாள் அமெரிக்க இராஜதந்திரி- இராணுவபேராசிரியர்.
டொமினிக் ரெய்சென் பச்-அமெரிக்கஆய்வாளர்

நசனல் இன்டிரெஸ்ட்