திமுக எம்பி கனிமொழி வீட்டிற்கான போலீஸ் பாதுகாப்பு மீண்டும் வழங்கப்பட்டுள்ளது என்று சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
சென்னை வேப்பேரியில் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
திமுக எம்பி கனிமொழி வீட்டிற்கான போலீஸ் பாதுகாப்பு மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் முழு ஊரடங்குக்கு மக்கள் பெரும் ஆதரவு வழங்கி வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக திமுக எம்பி கனிமொழி சிஐடி காலனியில் உள்ள வீட்டிற்கான போலீஸ் பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டதாக தகவல் வெளியானது.

