கனகபுரத்தில் முகாமைத்துவ பயிற்சி கட்டடம் திறந்து வைப்பு!

320 0

கிளிநொச்சியில் நிர்மாணிக்கப்பட்ட வடக்கு மாகாண முகாமைத்துவ பயிற்சி அலகுக்கான கட்டடம் இன்று (25) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

ககனகபுரம் பகுதியில் 123 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட இந்தக் கட்டடத்தை வடக்கு மாகாண ஆளுநர் பி.எம்.எஸ்.சார்ளஸ் திறந்து வைத்தார்.

இந்த கட்டடத் திறப்பு விழாவில், மாவட்ட அரச அதிபர், வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும் திணைக்கள அதிகாரிகள் எனப்பலர் கலந்து கொண்டனர்.