திருமண வைபவத்தில் கலந்துகொள்வோரின் எண்ணிக்கை அதாவது திருமண நிகழ்விற்கு அழைக்கப்படுவோர் 200 ஆக உயர்த்த அரசாங்கம் கவனம் செலுத்த உள்ளது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டில் கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாகத் திருமண வைபவங்கள் மற்றும் விசேட நிகழ்வுகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நாட்டில் மீண்டும் இயல்புநிலையை ஏற்படுத்தும் திட்டத்தின் கீழ் இத்தடை நீக்கப்பட்டுள்ளது.
திருமண வைபவத்தில் கலந்துகொள்வோரின் எண்ணிக்கை அதாவது திருமண நிகழ்விற்கு அழைக்கப்படுவோர் 100 பேருக்கு வரையறுக்கப்பட வேண்டும் என ஆரம்பத்தில் தெரிவித்தது.
தற்போது கலந்து கொள்ளக்கூடியவர்களின் எண்ணிக்கையை 200 ஆக உயர்த்த அரசாங்கம் கவனம் செலுத்த உள்ளது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கோவிட் -19 கட்டுப்பாடு தொடர்பான முன்மொழிவு ஏற்கெனவே ஜனாதிபதி பணிக்குழுவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது என சுற்றுலா மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்
குறித்த கலந்துரையாடல் பியாகாமாவில் உள்ள மண்டபத்தில் நேற்று இடம்பெற்றது. இதன் போது , இலங்கை அரங்குகள் மற்றும் கேட்டரிங் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.
அதாவது நாடு முழுவதும் 100 க்கும் மேற்பட்ட திருவிழா உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.
கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாகத் திருமண வைபவங்கள் மற்றும் ஏனைய விசேட நிகழ்வுகளில் பங்குபற்றுபவர்களின் எண்ணிக்கை 100 ஆக மட்டுப்படுத்தப்பட்டது மேலும் இது போதாது என்று சங்கத்தின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர்.
ஒரு திருமணத்தில் திருமண விருந்து உரிமையாளர்களுக்கு ஏற்படும் செலவு மிகப்பெரிய இழப்பு என்று அவர்கள் சுட்டிக்காட்டினர்.
இந்த சூழ்நிலையால் உணவு விநியோகிப்பவர்கள், வீடியோ மற்றும் புகைப்படம் எடுப்பவர்கள் , திருமண இசையமைப்பாளர்கள் உட்படப் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாகச் சங்கத்தின் பிரதிநிதிகள் அமைச்சருக்குச் சுட்டிக்காட்டினர்.
இந்த விடயம் தொடர்பாக ஏற்கெனவே சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜசிங்கவுடன் கலந்துரையாடியுள்ளதாகவும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என பிரசன்னா ரணதுங்க தெரிவித்தார்.
அத்துடன் உணவு விநியோகிப்பவர்கள் தங்கள் தொழிலுக்கு அரசாங்கம் எந்த உதவியும் செய்யவில்லை என தெரிவித்தது.
கோவிட்- 19 கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான அரசாங்கத்தின் திட்டத்தின் படி தனக்குச் சலுகைகள் வழங்க வில்லை என அவர் தெரிவித்தார்.
அத்துடன், சுற்றுலா மேம்பாட்டுச் சபையில் பதிவுசெய்தவர்களுக்கு இந்த சலுகைகள் கிடைக்கும் எனவும் பதிவு செய்யாதவர்கள் உடனடியாக சுற்றுலா அதிகார சபையில் பதிவு செய்யுமாறு அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இப்போது இணையத்தளம் மூலமாக விண்ணப்பிக்க வசதிகள் உள்ளன என அமைச்சர் தெரிவித்தார்.

