மிலேனியம் சவால்கள் உடன்படிக்கை குறித்து சிறிலங்கா அரசாங்கம் தொடர்ந்தும் பரிசீலித்து வருகின்றது – அமெரிக்க தூதரகம்

254 0

மிலேனியம் சவால்கள் உடன்படிக்கை குறித்து சிறிலங்கா அரசாங்கம் தொடர்ந்தும் ஆராய்ந்துவருவதாக இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட உடன்படிக்கை இலங்கைக்கு பாதகமானது என குறித்த உடன்படிக்கை குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழு தெரிவித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் நேற்று தெரிவித்த நிலையிலேயே அமெரிக்க தூதரக அதிகாரியொருவர் ஆங்கில ஊடகமொன்றிற்கு இதனை தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அரசாங்கம் 480 மில்லியன் அமெரிக்க டொலர் திட்டம் குறித்து அரசாங்கத்திடமே அதன் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை கேட்கவேண்டும் என தூதரக அதிகாரி தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுடனான மிலேனியம் சவால்கள் ஒப்பந்தத்தில் சிறிலங்கா கைச்சாத்திடாது என அமைச்சரவை பேச்சாளர்களில் ஒருவரான ரமேஷ் பதிரான தெரிவித்துள்ளார்.

மிலேனியம் சவால் ஒப்பந்தம் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நால்வர் கொண்ட குழு குறிப்பிட்ட உடன்படிக்கை இலங்கைக்கு பாதகமானது மற்றும் பொருத்தமற்றது என சுட்டிக்காட்டியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.