மாமனாரின் முச்சக்கரவண்டியை எரித்தவருக்கு மறியல்!

362 0

தனது மனைவியின் தந்தைக்குச் சொந்தமான முச்சக்கர வண்டியைத் தீவைத்து எரித்த மருமனை எதிர்வரும் 28ம் திகதி வரை விளக்க மறியில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிமன்றம் நேற்று (17) உத்தரவிட்டுள்ளது.

மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட டெலிகொம் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனது மாமனாருக்குச் சொந்தமான முச்சக்கர வண்டியை பெற்றோல் ஊற்றி எரித்துவிட்டு தலைதறைவாகியிருந்த நிலையில் நேற்று (16) மாலை குறித்த சந்தேக நபர் காத்தான்குடி பொலிஸார் சிசிடீவி காட்சிகளின் உதவியுடன் கைது செய்தனர்.