ஹோண்டுராஸ் நாட்டின் அதிபருக்கு கொரோனா – மருத்துவமனையில் அனுமதி

217 0

ஹோண்டுராஸ் நாட்டின் அதிபர் ஆர்லேண்டோ ஹெர்னாண்டசுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது பெரும் மனித உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை சுமார் 4 லட்சத்து 50 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகையே உலுக்கி வரும் இந்த கொடிய வைரஸ் பல்வேறு நாட்டு அரசியல் தலைவர்களையும் விட்டு வைக்கவில்லை. இங்கிலாந்து பிரதமர் ஜான்சனும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது குணமடைந்துள்ளார்.
இந்நிலையில், மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஹோண்டுராஸ்  நாட்டின் அதிபர் ஆர்லேண்டோ ஹெர்னாண்டசுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிபரின் மனைவிக்கும் கொரோனா பரவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆர்லேண்டோ ஹெர்னாண்டஸ் மற்றும் அதிபரின் மனைவி
இதையடுத்து, அதிபர் அந்நாட்டு ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
51 வயதான அதிபர் ஆர்லேண்டோ ஹெர்னாண்டசுக்கு நுரையீரலில் பிரச்சனை இருப்பதாகவும் அதற்காக நினோனியா சிகிச்சை மேற்கொண்டு வருவதாகவும் அவரது நிலைமை தற்போது சீராக உள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.