டுபாயிலிருந்து 290 பேர் சிறிலங்கா திரும்பினர்

321 0

கொரோனா வைரஸ் பரவலையடுத்து நாடு திரும்ப முடியாமல் இருந்த 290 இலங்கையர்கள், டுபாயிலிருந்து இன்று (18) அதிகாலை, இலங்கை விமான சேவைக்குரிய விசேட விமானம் மூலம் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இவர்கள் அனைவரிடமிருந்தும் பி.சீ.ஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டுள்ளன. இதனையடுத்து, இவர்களை விமான நிலையத்துக்கு அருகிலுள்ள 04 ஹோட்டல்களில் தங்கவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.