’தேர்தல் ஆணைக்குழுவுக்கு அரசாங்கம் முழுமையாக ஒத்துழைக்கும்’

311 0

சுகாதார பாதுகாப்புக்கு  முன்னுரிமையளித்து சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடத்துவதற்கு தேவையான சூழலை ஏற்படுத்தி தருவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார்.

கொவிட் 19 நோய்த் தொற்றுக்கு மத்தியில் தேர்தலை நடத்துவதற்கான பரிந்துரைகள் சுகாதார அமைச்சினால் முன்வைக்கப்பட்டுள்ளன. நாட்டின் வரலாற்றில் ,த்தகையதொரு சூழலில் ,டம்பெறும் முதலாவது தேர்தல் ,துவாகும். எனவே, சுகாதார பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கி தேர்தல் நடவடிக்கைகளை வெற்றிகரமாக மேற்கொள்ள அரசாங்கத்தின் முழுமையான ஒத்துழைப்பு தேர்தல் ஆணைக்குழுவுக்கு கிடைக்குமென ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் ஜனாதிபதியை நேற்று (17)  சந்தித்தபோதே, ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.