இலங்கை இந்தியாவை பின்பற்ற வேண்டும்!! 5000 ரூபா நாணயத் தாளை தடை செய்ய வேண்டும்!!

273 0

1599426531udayaஇந்தியாவில் கறுப்பு பணத்தை ஒழிப்பதற்காக இந்திய அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கையை இலங்கை அரசாங்கமும் முன்னெடுக்க வேண்டும் என பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தினால் நாட்டில் கறுப்பு பணம் வைத்திருப்பவர்களின் விபரம் இலகுவாக அம்பலமாகிவிடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், ராஜபக்ஸாக்களிடன் கறுப்புப் பணம் உள்ளதா, இல்லை மத்திய வங்கி கள்ளர்களிடம் கறுப்பு பணம் உள்ளதா என நாம் அறிந்து கொள்ள முடியும் என உதய கம்மன்பில கூறியுள்ளார்.

அரச சொத்துக்களை முறைக்கேடாக பயன்படுத்தப்பட்ட சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொள்ள அரசாங்கம் குழு ஒன்றை நியமித்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கறுப்பு பணத்தை நாட்டின் பொருளாதாரத்திற்கு கொண்டு வருவதற்காக 5 ஆயிரம் ரூபா நாணயத் தாளை தடை செய்யுமாறு உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

மோசடியாக சம்பாதித்த பணத்தை, இவர்கள் நாணயத்தாள், தங்கம், மாணிக்கம், முத்து, வைரம் என வைத்துள்ளனர்.

5 ஆயிரம் ரூபா நாணயத்தாளை தடை செய்தால், இலங்கையில் அரச சொத்துக்களை கொள்ளையிட்டு, கறுப்பு பணத்தை தம்வசம் வைத்திருப்பது யார் என்பதை அறிந்து கொள்ள முடியும்.

இது ஒன்றும் புதிய விடயம் அல்ல 1973ஆம் ஆண்டு அன்றைய நிதியமைச்சர் என்.எம். பெரேரா, அப்போது இலங்கையின் பெரிய நாணயமாக இருந்த 100 ரூபா நாணயத்தாளை தடை செய்தார் எனவும் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.