தனியார் கல்வி ஆசிரியர்களுக்கு மானியம் வழங்குக – மதிசுதன்

237 0

தனியார் கல்வி துறையினை மட்டும் நம்பி வாழ்வாதரத்தை நடத்தும் ஆசிரியர்களுக்கு அரச மானியங்கள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் கு.மதிசுதன் தெரிவித்தார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,

‘கொரோனா தொற்று காரணமாக ஏற்பட்ட ஊரடங்கு நிலைமையின் போதும் அதன் பின் தற்போது அனைத்து துறைகளும் வழமைக்கு திரும்பிய போதும் இன்னும் தனியார் கல்வி துறை இயங்க முடியாத நிலையே காணப்படுகிறது.

எதிர்வரும் ஜூன் 29ம் திகதி தனியார் கல்வி நிலையங்கள் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ள போதிலும் கடந்த மூன்று மாத காலமாக தனியார் துறை கல்வி கற்பித்தல் நடவடிக்கைகளினை நம்பி உள்ள பல ஆசிரியர்கள் உள்ளார்கள். அவர்களது வாழ்வாதராம் மிகவும் பாதிகப்பட்டதாக பல்வேறு தகவல்கள், தரவுகளில் இருந்து அறிகிறோம்.

இது வேதைனையான விட‌யம், எனவே தனியார் கல்வி துறையினை மட்டும் நம்பி வாழ்வாதரங்களினை நடாத்தும் ஆசிரியர்கள் மீது அரசு மானியங்கள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள முன்வர வேண்டும்.’ – என்றார்.