ஏழைகள் தினமும் வங்கிக்கு செல்வதில்லை அப்படி சென்றால் அவர்கள் ஏழைகள் இல்லை

284 0

tamil_news_large_165304420161121024321_318_219கறுப்பு பணத்தை வெளியில் கொண்டு வரும் நோக்கத்தில், 500 – 1,000 ரூபாய் நோட்டுகள்செல்லாது என, அரசு அறிவித்த நாள் முதல் வங்கிகளில் மக்கள் கூட்டம் இன்னும் குறைந்தபாடில்லை. பாமர மக்கள் அவதிப்படுவதாக பரவலாக பேசப்படுகிறது. வங்கி ஏ.டி.எம்., இயங்கவில்லை பணம் எடுக்க முடியவில்லை என, தினமும் பல்வேறு புகார்கள் வெளியாகி வருகின்றன.

ஏழைகள் தினமும்வங்கிக்கு சென்று பணம் மாற்றினால், அவர்கள் ஏழைகள் இல்லை. சிறு தொழில் செய்வோர் சிலர்இந்த திட்டத்தை பற்றி கருத்து தெரிவித்துள்ளனர்.பூ வாங்க வருபவர்கள், 500 ரூபாய் கொண்டு வருகின்றனர். அதை, பூ கடையில் கொடுத்தால் வாங்க மறுக்கின்றனர். அதனால் நாங்கள் வாங்குவதில்லை. வங்கியில் கணக்கு இருந்தாலும், வியாபாரத்தை விட்டு பல மணி நேரம் காத்திருக்க வேண்டும் என்பதால், 500 ரூபாய் நோட்டுகள் வாங்குவதில்லை. இன்னும் சில நாட்களில் சில்லரை புழக்கம் சீராகி விடும். வியாபாரமும்வழக்கம் போல் நடக்கும்.பி.லட்சுமி, பூ வியாபாரி, காஞ்சிபுரம்.

என்னிடம், 500 – 1,000 ரூபாய் நோட்டுகள் இல்லை. அதனால் நான் இந்த நோட்டு செல்லாது என அறிவிப்பு வெளியானதில் எனக்கு வருத்தம் கிடையாது. என் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களும் பெரும்பாலும், அதிகபட்சம், 100 ரூபாய் தான் கொடுப்பர். அதனால் சிரமம் இல்லை.

நோய் வாய்பட்டவர்களுக்கு கசப்பு மருந்து கொடுத்தால் தான் நோய் குணமாகும். நான் வங்கியில் பல நாள் காத்திருக்க வேண்டிய அளவுக்கு பணம் வைத்திருக்கவில்லை.ஜே. முனுசாமி, டீ கடைக்காரர், காஞ்சிபுரம்

பணம் செல்லாது என்ற அறிவிப்புக்கு முன் வாடிக்கையாளர்களிடம், ‘எங்க போகணும்…’ என்று தான் கேட்போம். சில்லரை பற்றி எதுவும் கேட்க மாட்டோம். தற்போது யார் வந்தாலும், ‘சார்… சில்லரை இருக்கிறதா…’ என, கேட்கிறோம். 500 ரூபாயாக இருக்கிறது என, யாராவது நோட்டை நீட்டினால், ‘அப்புறம் வந்து கொடுக்க சார்…’ என்று அனுப்பி விடுவேன்.அதனால், தற்போது சவாரி அதிகம் இல்லை. இருந்தாலும் இந்த திட்டம் நல்ல திட்டம் தான்.ஜீ.இன்பசேகரன்ஆட்டோ ஓட்டுனர், காஞ்சிபுரம்

வாடிக்கையாளர்களுக்கு சில்லரை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் முடி வெட்டிக் கொள்ள வருவதை குறைத்துக் கொண்டுள்ளனர். இருந்தாலும் எங்கள் தொழிலுக்கு பெரும்பாலும், 500, 1,000 ரூபாய் நோட்டுகளை யாரும் கொண்டு வருவதில்லை. நான் வங்கிக்கு போனது கூட இல்லை. அன்றாடம் வரும் வருமானத்தை செலவுக்கு வைத்துக்கொள்கிறேன். இன்னும் சில நாட்களில் நிலைமை சீராகிவிடும். எதிர் காலத்தில் இந்த திட்டத்தால் நல்ல பலன் கிடைக்கும்.ஜீ.ரத்தினவேலுமுடி திருத்தும் தொழிலாளி, காஞ்சிபுரம்

ஏழை எளிய மக்கள் தான், தெருவோர கடைகளில் பழம் வாங்குவர். இதற்கு முன், 500 – 1,000 ரூபாய் மாற்றக்கூடியதாக இருந்தது. நானும் வாங்கினேன். இப்ப அந்த பணத்தை வாங்கி, வங்கியில் மாற்ற நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளதால் தவிர்த்து விட்டேன். எதிர்காலத்திற்கான நல்ல திட்டம். சாமானிய மக்களுக்கு பல வகையில் லாபமாகத்தான் இருக்கும். இனியும் விலைவாசிகள் குறையும். ஏழைகள் பயப்பட தேவையில்லை.டி.சுமன்வண்டியில் பழம் விற்பவர், காஞ்சிபுரம்

பை தைக்க, பெரும்பாலும் சில்லரை ரூபாய்கள் தான் கொண்டு வருவர். இதற்கு முன், 1,000 ரூபாய்க்கு பொருட்கள் வாங்கி சென்றவர்கள் தற்போது சில்லரை தட்டுப்பாட்டால் பார்த்து செலவு செய்கின்றனர். சில்லரை இல்லை என்பதற்காக அனாவசியமான செலவுகளை குறைத்து விடுகின்றனர். எந்த நேரத்திலும் எவ்வளவு ரூபாயும் மாற்றலாம் என்று வரும் போது, அதற்கு தகுந்த வியாபாரம் நடக்கும். தற்போது நிலைமை சீராகி வருகிறது.பி.நரசிம்மன்.பை தைக்கும் தொழிலாளி, காஞ்சிபுரம்

செருப்பு தைத்தால் தான் சாப்பாடு. சில நேரத்தில், 20 ரூபாய் கொடுப்பதற்கு பதில், 500 ரூபாய் கொடுப்பர். இதற்கு முன் எந்த கடையில் கொடுத்தாவது மாற்றிக் கொள்வேன். தற்போது எந்த கடையிலும் பழைய, 500 – 1,000 ரூபாய் நோட்டுகளை வாங்க மறுக்கின்றனர். அதனால் நான் வாங்குவதில்லை. சில்லரை தட்டுப்பாடால், எங்கள் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் ஏழைகள் வங்கிக்கு சென்றுகாத்திருக்க தேவையில்லை.எம்.பார்த்திபன்செருப்பு தைக்கும் தொழிலாளி, காஞ்சிபுரம்

ஏழை மக்கள் அவதிப்படுகின்றனர் என, சொல்வது பொய். சில பணக்காரர்கள் பணத்தை மாற்றுவதற்காக வங்கியில் நிற்கின்றனர். இந்த கூட்டத்தை பார்த்து பணம் எடுத்தவர்கள் கையில் மை வைக்கப்படும் என்று சொன்னதில் இருந்து, கூட்டம் குறைந்து விட்டது. வரும், 30ம் தேதி வரை வங்கியில் பணம் மாற்றிக்கொள்ளலாம் என, அரசு அறிவித்துள்ளது. இருந்தும், முண்டி அடித்து கொண்டு இருக்கத்தான் செய்கின்றனர். சில நாட்கள் கஷ்டப்பட்டால் எதிர்காலத்தில் நமக்குமட்டுமல்ல நாட்டுக்கே நல்லது.

முன்பை விட வியாபாரம் குறைவு தான். சில நேரத்தில், 500 ரூபாய் வாங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. தினமும் வங்கியில் பணம் போட்டு, ‘செக்’ கொடுத்து நடத்தும் வியாபாரம் அல்ல. தினமும் கிடைக்கும் வருமானத்தை கொண்டு பொருட்கள் வாங்கி விற்பனை செய்கிறோம். இந்த திட்டத்தால் பயந்து கொண்டிருப்பவர்கள் பணக்காரர்கள் தான், ரியல்எஸ்டேட் வியாபாரம் படுத்து விட்டது. பண புழக்கம் குறைந்த விட்டது. நிலத்தின் விலை குறைந்து விடும்.ஆர்.சண்முகம், பெட்டி கடை வியாபாரி, காஞ்சிபுரம்

இந்த திட்டம் அறிவித்த போது, என் வீட்டில் இரண்டு, 500 ரூபாய் நோட்டுகள் மட்டுமே இருந்தன; அதை மாற்றி விட்டேன். வங்கியில் செலுத்தும் அளவுக்கு, தினமும் வருமானம் கிடையாது. அதனால் எங்கள் குடும்பத்தில் யாரும் வங்கியில் பணம் போடவோ அல்லது எடுக்கவோ காத்திருக்க வில்லை. தற்போது பல நாட்கள் வங்கியில் காத்திருப்பவர்கள் ஏழைகள் என்று சொன்னால் எப்படி நம்புவது?என்.கதிர்வேல்சலவை தொழிலாளி, காஞ்சிபுரம்