இருளில் மூழ்கிய ஜி.எஸ்.டி., சாலையால் ஆபத்து

273 0

tamil_news_large_165300620161121014146_318_219நெடுஞ்சாலைத் துறை, தாம்பரம் நகராட்சி இடையே ஒருங்கிணைப்பு இல்லாததால், ஒன்றரை மாதங்களாக, ஜி.எஸ்.டி., சாலையில் மின் விளக்குகள் எரியவில்லை; இதனால், வாகன விபத்துகள் ஏற்படும் அபாயம் நிலவி வருகிறது.

சென்னைக்கும், புறநகர் பகுதிகளுக்கும், ஜி.எஸ்.டி., சாலை வழியாக, தினமும், லட்சக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன.சென்னை மாநகரை, புறநகர் பகுதிகளுடன் இணைக்கும், இந்த பிரதான சாலையில், தாம்பரம் மேம்பாலத்தில் இருந்து, இரும்புலியூர் வரை உள்ள பகுதி, கடந்த ஒன்றரை மாதங்களாக இருளில் மூழ்கி உள்ளது.

மின் விளக்குகள்வெளியூர் மார்க்கத்தில், தாம்பரம் பேருந்து நிலைய பகுதி தொடங்கி, காவல் சோதனை சாவடி வரை, ஜி.எஸ்.டி., சாலையின் சாலை தடுப்புகளின் நடுவில் உள்ள, மின் விளக்குகள் எதுவும் எரியவில்லை. சில மின் கம்பங்களில் இருந்த விளக்குகள் கழற்றப்பட்டு உள்ளதால், அந்த பகுதி, முழுவதுமாக இருளில் மூழ்கி உள்ளது.

இதனால், அந்த பகுதியை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள், சிறு வியாபாரிகள், நடந்து செல்லும் பாதசாரிகள் உள்ளிட்ட, பல தரப்பினர் பாதிக்கப்படுகின்றனர்.ஜி.எஸ்.டி., சாலையில், சென்னை மார்க்கத்தில் இருந்து வரும் வாகன ஓட்டிகள், மேற்கு தாம்பரம் பகுதிக்கு, ‘யூ-டர்ன்’ எடுத்து திரும்பும் வாகனங்கள், வேக கட்டுப்பாட்டிற்கு வைக்கப்பட்டுள்ள இரும்பு தடுப்புகளை கவனித்து, ‘யூ-டர்ன்’ எடுத்து திரும்ப வேண்டும்.

மின் விளக்குகள் எரியாததால், இரும்பு தடுப்புகள் இருப்பது தெரியவில்லை என, வாகன ஓட்டிகள் கூறுகின்றனர். ஜி.எஸ்.டி., சாலையில் உள்ள மின் கம்பங்கள் மற்றும் அதன் பராமரிப்பு பணிகள், தாம்பரம் நகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளது.

தாம்பரம் நகராட்சி நிர்வாகத்தினர் கூறியதாவது:நகராட்சியிடம் முறையாக அனுமதி பெறாமல், நெடுஞ்சாலைத் துறையினர், தங்கள் இஷ்டப்படி பணிகளை செய்து வருகின்றனர்.கடும் அதிருப்திசாலை தடுப்புகளின் உயரத்தை அதிகப்படுத்தும் பணிக்காக, சில மின் கம்பங்களின் கேபிள்களை, நெடுஞ்சாலைத் துறையினர் துண்டித்ததால் தான், பிரச்னை துவங்கியது. தற்போது, நெடுஞ்சாலைத் துறையினரை தொடர்பு கொண்டு, பிரச்னையை சரி செய்ய வேண்டிய நடவடிக்கைகளை எடுத்து விட்டோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
பிரச்னை தொடர்பாக, சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை பொறியாளர், சிங்காரவேலன் கூறியதாவது: மின் விளக்குகள் பற்றி, தாம்பரம் நகராட்சி நிர்வாகத்திடம் கேட்க வேண்டும். ஜி.எஸ்.டி., சாலை, நெடுஞ்சாலை துறை கட்டுப்பாட்டில் உள்ளது. எங்கள் சாலையில் பணிகளை மேற்கொள்ள, தாம்பரம் நகராட்சியிடம், எதற்காக அனுமதி பெற வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

இரவில் வாகன ஓட்டிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் விஷயத்தில், இரண்டு துறைகளும், மாறி மாறி குற்றம் சாட்டிக் கொள்வது, பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.