சிறிலங்காவில் பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ளாத அமெரிக்க இராஜதந்திரி – அட்மிரல் ஜயநாத் விளக்கம்

261 0

சிறிலங்காவில் அமெரிக்காவின் சிரேஸ்ட இராஜதந்திரியொருவர் இலங்கைக்குள் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படாத நிலையில் அனுமதிக்கப்பட்டமை கற்றலிற்கான ஒரு தருணமாக அமைந்தது என ஜனாதிபதியின் வெளிவிவகார உறவுகளிற்கான மேலதிக செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

மேலும் இதன் காரணமாக இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் இராஜதந்திரிகள் பின்பற்றவேண்டிய புதிய நடைமுறைகள் குறித்த அறிவிப்பு வெளியானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

விமானநிலையத்தில் பிசிஆர் பரிசோதனைகள் கட்டாயமாக்கப்படுவதற்கு முன்னரே குறிப்பிட்ட இராஜதந்திரிக்கு இலங்கைக்கு வருவதற்கான அனுமதி வழங்கப்பட்டுவிட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தாங்கள் இராஜதந்திரிக்கான அனுமதியை வழங்கியவேளை, விமான நிலையத்தில் பரிசோதனைகள் கட்டாயமாக்கப்பட்டிருக்கவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.

இராஜதந்திரிக்கு அவர் தூதரகத்தின் மேற்பார்வையில் தனிமைப்படுத்தலை மேற்கொள்ளவேண்டும் எனவும் அவர் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுவார் எனவும் தெரிவித்திருந்தோம் ஆனால் அவர் எங்கு சோதனைக்கு உட்படுவார் என தெரிவிக்கவில்லை என ஜயனத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

ஜூன் முதலாம் திகதி சோதனைகள் விமான நிலையத்தில் கட்டாயமாக்கப்பட்டன எனவும் இராஜதந்திரிக்கு இது தெரியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக விமானநிலைய அதிகாரிகள் குழப்பநிலையை எதிர்கொண்டனர். அதன் காரணமாக அவர் செல்வதற்கு அனுமதித்தோம் என்றும் இதன் மூலம் நாங்கள் பாடங்களை கற்றுக்கொண்டு புதிய அறிவுறுத்தல்களை விடுத்துள்ளோம் எனவும்  அவர் தெரிவித்துள்ளார்.