14 வயது சிறுவன் காவல்துறையினரால் தாக்கப்பட்ட சம்பவம்- விசாரணைகள் ஆரம்பம்

236 0

14 வயதுடைய சிறுவனை பொலிஸார் தாக்கிய சம்பவம் குறித்து விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன. களுத்துறை மாவட்டத்திற்கான பிரதிபொலிஸ்மா அதிபர் விஜித் குணரட்ண இதனை தெரிவித்துள்ளார். விசாரணைகளின் முடிவில் காவல்துறை உத்தியோகத்தர்கள்; குற்றமிழைத்தனர் என்பது உறுதியானால் அவர்களிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அளுத்கமவின் தர்ஹா நகரை சேர்ந்த 14 வயது சிறுவனை காவல்துறையினர் கண்மூடித்தனமாக தாக்கிய சம்பவம் குறித்தும் பின்னர் சட்டவைத்திய அதிகாரி இனரீதியில் அவமதிக்கும் விதத்தில் நடந்துகொண்டமை குறித்தும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானா டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

ஓட்டிசம் என்ற மனஇறுக்க நோயினால் பாதிக்கப்பட் 14 வயது சிறுவனையே காவல்துறையினர் அளுத்தகமவின் தர்காநரில் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர் என முன்னாள நாடாளுமன்ற உறுப்பினர் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

தாக்கப்பட்ட சிறுவனின் உடலில் காணப்படும் காயங்களின் படங்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.