மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் பிரிவு பகுதி கிணறு ஒன்றில் இருந்து பெண்ணொருவரின் சடலம் இன்று (03) மீட்கப்பட்டுள்ளது.
காத்தான்குடி 3ம் குறிச்சி கல்மீசான் வீதியிலுள்ள வீட்டில் வசித்து வந்த 52 வயதுடைய பெண்ணின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
குறித்த பெண் கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக மன நோயாளியாக இருந்து வருவதுடன் அதற்கான சிகிச்சையையும் பெற்று வந்துள்ளார் என பொலிஸாரின் ஆரம்ப விசாரணையிலிருந்து தெரிய வருகின்றது.

