குருநாகல் மாவட்டத்தில் மேலும் பல இடங்களில் பரவும் வெட்டுக்கிளிகள்

254 0

குருநாகல் – மாவத்தகமவில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அடையாளம் காணப்பட்ட ஒரு வகையான வெட்டுகிளிகள், அந்த பகுதியில் மேலும் சில கிராம சேவகர் பிரிவுகளில் பரவியுள்ளதாக விவசாய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மாவத்தகம பிரான்சிஸ்கா பகுதியில் முதன் முறையாக இனம் காணப்பட்ட இந்த வெட்டுக்கிளிகள், இன்று (செவ்வாய்க்கிழமை) மாவனல்லை – அத்னகொட பிரதேசத்திலும் பரவியுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த வெட்டுக் கிளிகள் மரவள்ளி, தென்னை மரம், சோளம், வாழை போன்ற பயிர்களை தாக்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், அவற்றை அழிப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது குருநாகல் மாவட்டத்தின் விவசாய அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.

எனினும் இந்த வெட்டுக்கிளிகள் இந்தியா, பாகிஸ்தான் நாடுகளில் பயிர்களை அழித்துவரும் வெட்டுக்கிளிகள் இனம் இல்லையென விவசாய அதிகாரிகள் தெரிவித்துள்ளமையும் இங்க சுட்டிக்காட்டத்தக்கது.

இதேவேளை பொலன்னறுவை வெலிகந்த பிரதேசத்தில் விவசாய பயிர்களை சேதப்படுத்தும் ஒரு வகையான பட்டாம்பூச்சி இனங்களும் பரவியுள்ளதாக விவசாய அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.