பாதாள தலைவர்கள், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் சிறைச்சாலைகளில் இருந்து குற்றங்களை வழிநடத்தும் செயற்பாடுகள் உடனடியாக நிறுத்த வேண்டுமென, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
நாட்டினுள் இடம்பெறும் பல்வேறு குற்றங்கள் மற்றும் பெருமளவு போதைப்பொருள் கடத்தல்கள் சிறைச்சாலைகளில் இருந்து வழிநடத்தப்படுவதாக உறுதியான தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
தொடர்பாக மக்கள் மத்தியிலும் நீண்ட காலமாக இருந்து வரும் கருத்து மிகவும் கவலைக்குரியதாகும் என ஜனாதிபதி குறிப்பிட்டார்.
அத்துடன், சிறைச்சாலைகளுக்குள் கையடக்க தொலைபேசி பாவனையை முற்றாக ஒழிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
சிறைச்சாலைகளின் உள்ளக நிலைமைகள் பற்றி ஆராய்வதற்காக நேற்று (01) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதிஇதனை தெரிவித்தார்.

