அவுஸ்திரேலியாவில் நடந்த தேசிய மட்ட 20-20 துடுப்பாட்டப் போட்டி ஒன்றில், இலங்கையில் இருந்து புகலிடம் தேடிக் சென்ற தமிழ் இளைஞர்களின் அணி வெற்றியைப் பெற்றுள்ளது.
அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில், நடந்த போட்டியில், ‘ஓசன்ஸ்12′ என்ற பெயரில் ஆடிய ஈழத்தமிழ் இளைஞர்களின் அணி வெற்றி பெற்றது.
‘ஓசன்ஸ் 12′ அணி சுதாகர் சேனாதிபிள்ளை தலைமையில் விளையாடியிருந்தது. தேசிய மட்டத்திலான, இந்த போட்டியில் வெற்றியைப் பெற்றதன் மூலம், ஈழத்தமிழ் இளைஞர்களின் அணி அவுஸ்திரேலியாவில் கவனத்தைப் பெற்றிருக்கிறது.

