படகு விபத்து ஒருவரைக் காணவில்லை

20 0

கடற்றொழில் பரிசோதகர்களின் அனுமதியின்றி இன்று (23) காலை ஹம்பாந்தோட்டை- கோன்கல கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கைக்கு சென்ற படகொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்துக்குள்ளான படகிலிருந்த மூவரில் இருவர் காப்பாற்றப்பட்டுள்ளதுடன், ஒருவர் காணாமல் போயுள்ளார்.

இவ்வாறு காணாமல் போன நபர்,  ஹம்பாந்தோட்டையைச் சேர்ந்த 23 வயதான, மொஹமட் காசிம் மொஹமட் ஹஸீப் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், காணாமல் போன நபரை தேடும் நடவடிக்கையில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.